நாட்டில் உள்ள 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது – கோவை மேயர்

Default Image

ஒன்றிய அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில், சுமார் 100ல் மிகவும் குறைவாக உள்ள நிலக்கரி கையிருப்பு

நாட்டில் 150 அனல் மின் நிலையங்களில்  81 நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய மின்சார ஆணையம் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நடப்பு மாதத்தில் மட்டுமே மின்தேவை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், எனவே பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில், சுமார் 100ல் மிகவும் குறைவாக உள்ள நிலக்கரி கையிருப்பு. இதனால் நாட்டில் உள்ள 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்