வெட்டப்படும் மரத்திற்கு தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும்… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

madras HC Egmore

சென்னை எழும்பூர் ரயில்நிலைய விரிவாக்க பணிகளில், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக அதனைச் சுற்றியுள்ள மரங்கள் வெட்டப்படுவதாக பசுமை தாயகம் அமைப்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதன் விசாரணையில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகளை நடவேண்டும் என ரயில்வே துறைக்கு உத்தரவளித்துள்ளது.

பசுமை தாயகம் அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவில், 100 வருடங்களுக்கு மேலான மரங்களும் இந்த விரிவாக்க திட்டங்களுக்காக வெட்டப்பட இருக்கின்றன என குறிப்பிட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் தெற்கு ரயில்வே தரப்பில் அரசின் அனுமதி பெற்று மரங்கள் வெட்டப்படுவதாகவும், நிபந்தனைகளுக்குட்பட்டு விதிகள் பின்பற்றப்படும் எனவும் உறுதி அளித்தது.

இதன்படி 105 மரங்கள் வேரோடு இடம்பெயர்த்து இடமாற்றம் செய்யப்படுவதாகவும், 180 மரங்கள் வெட்டப்படுவதாகவும் நிபந்தனைகள் போடப்பட்டிருப்பதை விசாரித்த நீதிபதிகள், வெட்டப்படும் மரத்திற்கு பதிலாக 12 மரக்கன்றுகள் நடுவதற்கும் உத்தரவளித்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவதையும், வேறு இடத்திற்கு மாற்றப்படுவதையும் மாவட்ட பசுமைக்குழு கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டுள்ளது.

மேலும் விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என்றால் பசுமை தாயகம் அமைப்பு நீதிமன்றத்தை நாடவும் அனுமதி அளித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு வழக்கை முடித்து வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்