#Breaking-பாடவாரியாக முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது.
அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் மாவட்டங்களிலேயே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்டங்களில் திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. அதே போல ஈரோடு மாவட்டம் 2ம் இடமும்,கோவை 3ம் இடமும் பெற்றுள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி
1.இயற்பியல் பாடத்தில் -95.94%, வேதியியல் பாடத்தில் 95.82%, உயிரியல் பாடத்தில் 96.14% , கணிதம் பாடத்தில் 96.31%, தாவரவியல் பாடத்தில்-93.95% ,விலங்கியல் பாடத்தில் 92.97%,கணினி அறிவியல் பாடத்தில் 99.51%, வணிகவியல் பாடத்தில் 95.65%,கணக்கு பதிவியல் பாடத்தில் 94.80%,அறிவியல் பாடப்பிரிவுகள் 93.64%, வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%, கலைப்பிரிவுகள் 84.65%, தொழிற்பாடப் பிரிவுகள் 79.88% தேர்ச்சி விகிதத்தினை பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.