கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு கோவையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்றது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் வழக்கு நடைபெற்ற இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்தார். ஒருவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள 12 பேர் குற்றவாளிகள் என உத்தரவிடப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான் , சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகிய 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது .
கிறிஸ்டோபர் கருப்பு கௌதம் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் இன்று தீர்ப்பு உத்தரவு வெளியான பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…