தமிழகத்தில் 11 ஐபிஎஸ் உட்பட 12 அதிகாரிகள் பணியிடமாற்றம்.!
தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிடமாற்றம்.
கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம். சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக நியமனம். நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம்.
புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ்கண்ணா வேலூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம். நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணனுக்கு பதில் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 18, 2021