#Breaking :12 மணி நேரம் வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு..!

Published by
லீனா

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு 

DMK Ministers
[Image source : Google]

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பு சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெறத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. இன்று மாலை 3 அமைச்சர்கள் கொண்ட குழு தொழில்சங்கங்களுடன் ஆலோசனை நடக்கவுள்ள நிலையில், மசோதா சட்டத்துறைக்கு  வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

20 minutes ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

45 minutes ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

1 hour ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

2 hours ago

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

3 hours ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

3 hours ago