தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க வேண்டும்..! – மு.க.ஸ்டாலின் கடிதம்

Default Image

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று, கிழக்குக் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல, தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திடும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்பட்டினை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 M.K.Stalin letter  M.K.Stalin letter 2

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்