கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்பு …!புயலுக்கு 63 பேர் உயிரிழப்பு…!முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

கஜா புயலுக்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி தமிழகத்திற்கான உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் இன்று காலை சந்திக்கவுள்ளார்.

Image result for gaja flood

இன்று கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அவரதுஇல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெய்குமாரும் சென்றிருந்தார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டுள்ளது.கஜா புயல் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு, பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளேன் .வர்தா, ஒக்கி புயல் நிவாரணத்தொகையில் உள்ள நிலுவையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.புயலுக்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

நான் ஹெலிகாப்டர் மூலம் சென்று ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன? எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன? என தாழ்வாக பறந்து கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தேன்.முழுமையான சேத விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றேன்.கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு. அதிமுக அரசை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றது.

நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர், குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago