50 உழவர் சந்தைகளின் வசதிகள் மேம்படுத்த 12 கோடியே 50 லட்சம்..!
50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.
கடலூர், திண்டுக்கல், ஈரோடு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பேரூராட்சிகளிலும், நகர்ப்புறங்களிலும் சிறிய அளவிலான உழவர் சந்தைகள் நடப்பாண்டில் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
விவசாய விளைபொருள்களை அருகில் உள்ள பெரு நகர சந்தைகளுக்கு எடுத்துச் சென்று லாபகரமாக சந்தைப்படுத்துவதற்கு சிறிய இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டம் ரூ.59 கோடியே 55 லட்சம் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கப்படும்.