ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது.
ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார். மேலும், பிளஸ் டூ தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன.
தேர்வை நடத்தவில்லை எனில் மேற்படிப்பிற்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வை நடத்துவதா..? இல்லையா..? என்பது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். திடீரென நீட் தேர்வு நடந்தால் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சாதகமாக அமையும் என்ற கருத்தும் எழுந்துள்ளது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…