பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: சென்னை மாநகரில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றாக சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்டறிந்து அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் வயது 24, அதே பகுதியை சேர்ந்த சரத் வயது 23, முரளி வயது 23, சண்முக மூர்த்தி வயது 24, அசோக் குமார் வயது 23, அடையாறு மல்லிகைப்பூ நகரை சேர்ந்த ராஜதுரை வயது 22, அதே பகுதியை சேர்ந்த செல்வா வயது 23, நங்கநல்லூர் பி.வி.நகர் 12வது தெருவை சேர்ந்த சீதா என்கிற சீதாராமன் வயது 22, மடிப்பாக்கம் மூவரசன்பேட்டையை சேர்ந்த ராமா என்கிற ராமச்சந்திரன் வயது 25, திருநின்றவூர் 2வது மெயின்ரோட்டை சேர்ந்த ஜோசப் தேவகுமார் வயது 30, பெரிய பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த் லட்சுமணன் வயது 26, மாதவரம் கொல்கத்தா கடை தெருவை சேர்ந்த கங்காதரன் வயது 36 ஆகிய 12 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில், அருண், சரத், முரளி, சண்முக மூர்த்தி, அசோக் ஆகியோர் மீது மதுரவாயலில் சங்கர் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. ராஜ துறை மீது ஒரு கொலை, 2 கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது.