12 தொழிற்பயிற்சிகள் +2 முடித்த மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,திருப்பூர் போன்ற பெரிய நகரங்களில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஏற்றுமதி, ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் போன்ற 12 தொழிற்பயிற்சிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுவள்ளியாம்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தை சரளமாக கற்றுத் தர இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சுமார் 600 பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.