12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் .+1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும் .10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பே தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதியும்,11 வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 தேதியும் வெளியாகின்றது. மொழிப்பாடம் ஒரே தாளாக மாற்றப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.தமிழக மாணவர்கள் தேர்வெழுத, இங்கேயே நீட் தேர்வு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.