11-ஆம் வகுப்பு மாணவரை திருமணம் -ஆசிரியை போக்சோவில் கைது..!

11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்துள்ள தனியார் பள்ளியில் ஷர்மிளா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமான நிலையில் மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், தனது மகன் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஆசிரியை சர்மிளா தொலைபேசி என்னை கொண்டு தேடிய காவல்துறை திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஆசிரியை சர்மிளா அவரது தோழியின் வீட்டில் இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
விசாரணையில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், காவல்துறை ஆசிரியை சர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவன் திருச்சி உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025