ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்.
கொரோனா வைரசின் தாக்குதலால் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விக்கிரபாண்டி எனும் 16 வயது மாணவன் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்துள்ளார்.
பாடங்கள் புரியவில்லை என பெற்றோரிடம் கூறியும் அவரது தந்தை படித்துதான் ஆக வேண்டும் என கண்டிப்புடன் கூறியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் விக்ரபாண்டி யாரும் வீட்டில் இல்லாதபோது தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் உடனடியாக சேர்த்தாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் ஏற்கனவே ஒரு மாணவனும் இதுபோல ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…