+1 மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Default Image
  • +1 மாணவர் சேர்க்கைகான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் தமிழக அரசு ஆல்பாஸ் செய்தது.

அதனை தொடர்ந்து  கொரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் இருப்பதால் மாணவர்களின் நலனைக் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஜூன் 3 வது வாரத்தில் இருந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் படி பாடங்களை நடத்தலாம்பள்ளிக் கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்தான நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பிரிவிலும் அனுமதிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பாடப்பிரிவை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவித்தால் 10 முதல் 15 சதவீதம் விழுக்காடு வரை கூடுதலாக சேர்க்கலாம். மேலும் மிக அதிகப்படியான மாணவர்கள் பிரிவில் சேர விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு அதே பிரிவில் முந்தைய பாடத்திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தி அதற்கேற்ப மாணவர்களுக்கு பிரிவை கொடுக்கலாம். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, இணையதளம் வழியில் பாடம் நடத்த ஆரம்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்