11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று, ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி வரை 11ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.