தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் 119 பேர் உயிரிழப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் தொடர்ந்து 4 -ம் நாளாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,058 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உயிரிழந்தோர் விகிதம் 1.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 118 பேரில், தனியார் மருத்துவமனையில் 38 பேரும், அரசு மருத்துவமனையில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 112 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 13 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 1,462 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,384 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 329 பெரும், மதுரையில் 308 பேரும், திருவள்ளூரில் 315 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,194 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)