அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் கொரோனாவால் 29 வயது இளைஞர் உட்பட மேலும் 117 பேர் உயிரிழப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் தொடர்ந்து 12 -ம் நாளாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 -ஐ கடந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 837 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று திருவள்ளூரை சேர்ந்த 29 வயது இளைஞர் உட்பட 117 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உயிரிழந்தோர் விகிதம் 1.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 117 பேரில், தனியார் மருத்துவமனையில் 34 பேரும், அரசு மருத்துவமனையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 1,579 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,408 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 335 பெரும், மதுரையில் 309 பேரும், திருவள்ளூரில் 324 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,235 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,279 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!
February 13, 2025![PM Modi USA Visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-USA-Visit.webp)
மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
February 13, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1-1.webp)