11,357 பேர் திருட்டு பயணம்…ரூ 19,20,800 அபராதம்….!!
சென்னை மாநகரப் பேருந்துகளில் கடந்த 3 மாதங்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 11,357 பேரிடமிருந்து ரூ.19 லட்சத்து 20 ஆயிரத்து 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்து களில் தினமும் சராசரியாக 37 லட்சம் பேர் பயணம் செய்து வரு கின்றனர். சாதாரண பேருந்து களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப் பட்டதால் பேருந்தில் பயணிப் போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20,000 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப் போரை போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு சிறப்பு பரிசோதனை கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணச்சீட்டு இன்றி பயணிப் போரிடம் அபராதத் தொகை அதிக பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை யில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 3,575 பேரிடமிருந்து ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்து 900, ஆகஸ்ட் மாதத்தில் 4,082 பேரிடமிருந்து ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 650 மற்றும் செப்டம்பரில் 3,700 நபர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 250 என மொத்தம் 11,357 பேரிடமிருந்து அபராதமாக ரூ.19 லட்சத்து 20 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப் படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
dinasuvadu.com