ஊரடங்கை மீறியதால் 1,13,117 பேர் கைது..32 லட்சத்துக்கு மேல் அபராதம்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை (ஊரடங்கு) அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய 1,13,117 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 87,577 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில். ரூ.32,83,844 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,03,833 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.