கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. இதில் பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், சமூக தொண்டர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பாஜகவினர் நூதனமான சுவர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் 1 கோடி சேலஞ்ச என்ற தலைப்புடன் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமகன்களில் யாராவது பாதிப்படைந்துள்ளார் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தால் ரூ.1,00,00,000 கோடி பரிசு வழங்கப்படும் என பாஜக சார்பில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாவட்டச் செயலாளர் தங்கவேல் வழக்கறிஞர் பிரிவு என அச்சிடப்பட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோல் தமிழகத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டு இருக்காங்கனு சொல்லுங்க, நான் பதில் சொல்றேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமடைந்தார் என குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…