எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வயது உச்ச வரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.