110 ஆண்டுகள் எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு நிறைவு! ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!
110 ஆண்டுகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1908 ஆம் ஆண்டு ஜுன் 11 ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலைய புதிய கட்டடம் கட்டப்பட்டு, ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது. அப்போது போட் ரயில் எனப்படும் 3 ரயில்கள் இயக்கப்பட்டன. 110 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 11 நடைமேடைகள் அமைக்கப்பட்டு 55 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள்பயணிக்கின்றனர். எஸ்களேட்டர், சிசிடிவி போன்ற வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 110வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பழைய ரயில்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எழும்பூர் ரயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.