தொடர் கனமழை 5 நாளில் 11 பேர் பலி! வெளியான எச்சரிக்கை!
சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர் மழை காரணமாக கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக பேர் உயிரிழப்பு பேரிடர் மேலாண்மைத்துறை தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். கனமழை இருப்பதன் காரணமாக, மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பவேண்டும் எனவும், சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறை கூறியுள்ளது.
தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக கோவை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது வரும் 24- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.