மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும்! ஐகோர்ட் கிளையில் வழக்கு!

Default Image

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர், மருத்துவ கலந்தாய்வில் புதிய 11 அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு நடைபெற்று வருகின்ற நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மனுவில், 11 புதிய அரசு கல்லூரிகளை நடப்பு கலந்தாய்வு சேர்க்காதது ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாசுதேவா தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்