பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணையால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி …! மு.க.ஸ்டாலின்
துணை-முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணையால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், அண்ணாவால் திமுக தொடங்கப்பட்டது .ஆட்சிக்காக அல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் ஏற்றம் காணவே துவக்கப்பட்டது.துணை-முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி.20 தொகுதி இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் திமுக வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.