சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான, அதிமுக அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்எல்ஏக்களும், அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. அரசுக்கு எதிராக வாக்களித்த , எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும்,இபிஎஸ் தலைமையிலான அணியினரும் மீண்டும் ஒன்றிணைந்து, ஒரே அ.தி.மு.க.,வாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதையடுத்து, அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதீமன்ற நீதிபதிகள், சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் பின் அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
தற்போது சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு மாதம் அவகாசம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…
சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…
சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…