11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்கு அளித்தனர்.இந்த விவகாரம்தொடர்பாக திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
மேலும் கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைத்துள்ளது. இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.