புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று( சனிக்கிழமை) மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னப்பாண்டி மற்றும் அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகிய மூன்று பேரும் இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு என்ற பகுதிக்கு அருகே மீன் பிடித்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்தாக கூறி அவர்களை படகுடன் கைது செய்தனர்.
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை இரு படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடித்த மொத்தம் 11 பேரிடமும் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்திய கடல்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…