11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு…!!!

Published by
kavitha

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுமி கற்பழிப்பு தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன் மற்றும் ஏரோல் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்கள்.இந்த வழக்கில் கைதான 17 பேரும் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Image result for அயனாவரம்

17 பேரும் ஜாமீன் கோரி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் மனு தாக்கல் செய்தனர். மகளிர் கோர்ட்டு அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.இதன்படி கடந்த 5-ந்தேதி 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது விசாரணையை முடித்துள்ளார்.இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 300 பக்கங்களை கொண்டதாக இருந்தது.அந்த சிறுமியை 17 பேரும் 7 மாதங்களாக மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்கலாம்.12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டால் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய கிரிமினல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. போக்சோ சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இதில் 376 ஏ.பி. மற்றும் 376 டி.பி. ஆகிய 2 சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 17 பேருக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கலாம்.

DINASUVADU

 

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago