11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார கால அவகாசம் கோரியுள்ள நிலையில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு உரிமையைப் பெற நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.