ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியர்!அசத்தி காட்டிய 10-ம் வகுப்பு மாணவி!

Default Image
  • ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியர்.அசத்தி காட்டிய பள்ளி மாணவி.
  • பிற மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்ததாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மானாமதுரைக்கு அருகே  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிளகனூர் கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றன.அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிதாக நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்த ஆசிரியர்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளில் சிறந்து விளங்கும் ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக படிப்பு ,விளையாட்டு ,பழக்கவழக்கம் ,ஒழுக்கம் ,பிறருக்கு உதவும் குணம் ஆகியவைகளில் சிறந்து விளங்கும் 10 -ம் வகுப்பை சேர்ந்த காவியா என்ற மாணவியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

பின்னர் ஒருநாள் தலைமை ஆசிரியராக தேர்வான காவ்யாவை பள்ளியின் தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியரும் இணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவைத்துள்ளனர்.

பின்னர் தலைமையாசிரியரின் பொறுப்புகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் காவ்யாவிற்கு எடுத்துரைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து காவ்யா பள்ளியின் முக்கிய கோப்புகளை பார்வையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியர்களிடம் கலந்தாய்வு நடத்திய காவ்யா ,ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.அப்போது மாணவர்களிடம் பேசிய அவர் அனைவரும் படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி செயல்பட்டது பிற மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்