புதுசேரியில் உள்ள நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகரில் மோகன் என்றவர் வசித்து வருகிறார்.இவர் எலெக்ட்ரீசன் வேலை செய்து வருகிறார்.இவரது மகள் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் செல்போனை எடுத்து கொண்டு மெசேஜ் அனுப்புவது சேட் செய்வது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார்.இப்படி பள்ளிக்கு சென்று வந்தவுடனே செல்போனை எடுக்கிறியே என்று பலமுறை திட்டியுள்ளனர்.
இதை காதிலே வாங்காதவாறு தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி கொண்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்று வந்தவுடன் செல்போனை எடுத்துக்கொண்டு சேட் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மாணவியை கடுமையாக திட்டி படிப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் அதனால் படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியுள்ளனர்.பின்னர் தூங்க சென்றுள்ளனர்.
மறுநாள் சனிக்கிழமை காலை தூக்கியத்திலிருந்து எழுந்து பார்த்தப்போது தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மாணவியின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் மாணவியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…