10-ம் வகுப்பு தேர்வு.. ஒரு அறையில் 10 மாணவர்கள்..!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் +1 தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவித்தார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்புக்கு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல, 34, 842 மாணவர்கள் பேருந்து வசதிஇல்லாமல் கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால், அந்த +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.