பள்ளி அளவில் முதலிடம் …2 கைகளை இழந்த 10ம் வகுப்பு மாணவர் படைத்த பெரிய சாதனை.!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. அதில், இந்தாண்டு10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், 2 கைகளை இழந்த 10-ஆம் வகுப்பு மாணவர்ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவன் தான் க்ரித்தி வர்மா.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த க்ரித்தி வர்மாவை அவரது தாயார் கூலி வேலைக்கு சென்று படிக்க வைத்து வருகிறார். க்ரித்தி வர்மா 2 கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர். தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வரும் இந்த மாணவன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.