10 ஆம் வகுப்பு ரிசல்ட்:தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 – முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!

Published by
Edison

10 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100க்கு 100 எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார்.அப்போது செய்தியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

ஆனால்,10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணி முதல் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in https://dge2.tn.nic.i ,https://dge.tn.gov.in, https://dge1.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண்,பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.மேலும்,மாணவர்களின் தேர்ச்சி விவரம் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில்,தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அதைப்போல,ஆங்கிலத்தில் 45 மாணவ,மாணவியரும்,கணிதப்பாடத்தில் 2,186 பேரும்,அறிவியல் பாடத்தில் 3,841 பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம்,10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில்,மாணவிகள் 94.38% (4.27 லட்சம்), மாணவர்கள் 85.83% (3.94 லட்சம்) பேர் தேர்ச்சி பெற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.மேலும்,97.15% பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும்,95.96% பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும்,மதுரை 95.09% பெற்று நான்காவது இடத்திலும்,ராமநாதபுரம் மாவட்டம் 94.26% தேர்ச்சி விகிதம் பெற்று 5-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

22 minutes ago

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

32 minutes ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

49 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

1 hour ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

2 hours ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

3 hours ago