#BREAKING :10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதா.? ஒத்திவைப்பதா.? குறித்து ஆலோசனை .!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பின்னர் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன்12-ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செல்ல மாற்று வழிகளை செய்து கொடுப்பது இதுதொடர்பான விளக்கம் இன்று (அதாவது 19 ஆம் தேதி) வெளியிடப்படும் என கடந்த வாரம் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.