“10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களே….நாளை முதல் இதற்கு பதிவு செய்யலாம்” – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி,அனைத்து தனித் தேர்வர்களும் 18.11.2021 (வியாழக்கிழமை) முதல் 03.12.2021 (வெள்ளிக்கிழமை) -க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஒம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் http://www.dge.tn.gov.in/ta/index.html என்ற இணையதளத்தில் 18.11.2021 முதல் 03.12.2021 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 03.12.2021 க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.

2021–2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ள நடத்தப்படும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் சேர்தலுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகள்:

  1. தேர்வர் விண்ணப்பத்திலுள்ள அனைத்து கலங்களையும் தவறாது பூர்த்தி செய்தல் வேண்டும்.
  2. இவ்விண்ணப்பப் படிவமானது இரண்டு படிவங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். செய்முறை வகுப்பிற்கான கட்டணம் ரூ.125/- பணமாக அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செலுத்துதல் வேண்டும்.
  3. கீழ்க்கண்ட கல்வித் தகுதிகளையுடைய தேர்வர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

(i) நேரடி தனித்தேர்வர்கள்:

(அ) 2022 தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளன்று 14 1/2 வயதுபூர்த்தி செய்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ/மாணவியரும் மற்றும் 9 ஆம் வகுப்பு பயின்று இடையில் நின்ற மாணவ/மாணவியரும், தேர்வுத் துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு (ESLC) பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வை எழுதலாம்.

(ஆ) அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கல்வி காப்புறுதி திட்டத்தின் கீழ்பயின்று 8- ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றதாக மாற்று சான்றிதழ் பெற்றவர்கள்.

(இ) உண்டு உறைவிடப்பள்ளியில் 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றதாக மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள்.

(ஈ) திறந்தவெளி பள்ளியில் “C” Level சான்றிதழ் பெற்றவர்கள். (உ) 14 1/2 வயதை பூர்த்தி செய்த உழைக்கும் சிறார் கல்வி திட்டத்தின் கீழ்

தொழிலாளர் அமைச்சகம் இந்திய அரசின் கீழ் வழங்கப்பட்ட முறைசாராக் கல்வி மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள். (ஊ) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட திறந்தவெளிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் தேதியன்று 14 1/2 வயது பூர்த்தி செய்யும்பட்சத்தில் திறந்த வெளி பாடத் திட்டத்தில தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களை பாட்டும் தனித்தேர்வர்களாக 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

(II) ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள்: முந்தைய ஆண்டுகளில் பழைய பாடத்திட்டத்தில்/சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று. செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்திராத தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

4. சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான வண்ண நிழற்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு வெள்ளையிலான நிழற்படத்தை ஒட்டக்கூடாது”,என்று தெரிவித்துள்ளார்.

 

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago