10-ம் வகுப்பு பொது தேர்வு! திமுக தலைமையில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து!
திமுக தலைமையில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை எதிர்த்து அரசியல் பிரபலங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்குமாறும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து நாளை (ஜூன் 10) திமுக, தோழமைக் கட்சிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது, தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ததுடன், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்பாட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.