இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.!
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
இன்று முதல் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று ஏப்ரல் 6- தமிழ் (மொழிப்பாடம் ), ஏப்ரல் 10 – ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழி பாடம், ஏப்ரல் 17- அறிவியல், ஏப்ரல் 20- சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.
இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 37,798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 2,640 சிறை கைதிகள், 13,151 மாற்றுத் திறனாளிகள் ஆகியோரும் அடங்குவர். அதைப்போல இதில் 5,01,028 மாணவர்கள், 4,75,056 மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடுகள் :
- தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்டமின்சாதனங்களை கொண்டு வரதடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும்.
- விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயரை குறிப்பிடக்கூடாது.
- விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாகொண்டு எழுதக்கூடாது.
- தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றாலோ அல்லது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.