தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய அரசு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 12,616 பள்ளிகளில் இருந்து 4,57,525 மாணவர்களும் , 4,52,498 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தமாக 9,10,024 பேர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அதே போல புதுச்சேரியில் 7,590 மாணவர்களும், 7,362 மாணவிகளும் என மொத்தம் 14,952 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதமாக உள்ளது. இதில் மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் வாயிலாக மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன . அதில், 87.90 சதவீதம் அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 91.77 சதவீதம் அரசு உதவி பெரும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 97.43 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும், கணிதத்தில் 20,691 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும் , சமூக அறிவியலில் 4,428 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட வாரியாக அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது . அம்மாவட்டத்தின் தேர்ச்சி 97.31ஆக உள்ளது. சிவகங்கை தேர்ச்சி விகிதம் 97.02ஆக உள்ளது. ராமநாதபுரத்தின் தேர்ச்சி விகிதம் 96.24ஆக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.24ஆக உள்ளது. திருச்சி மாவட்ட தேர்ச்சி விகிதம் 95.23ஆக உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 289, அங்கு மொத்த தேர்ச்சி விகிதம் 89.14 சதவீதம் ஆகும். 100 சதவீதம் பெற்ற பள்ளிகளில் எண்ணிக்கை 107, புதுச்சேரி மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 90 ஆகும் , காரைக்கால் பகுதிகளில் 17 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன, புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 108 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி கண்டுள்ளன.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…