10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி.!
தமிழ்நாட்டில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 91.39% சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 9.4 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் தேர்ச்சி அடைந்தவர்களில் 94.66% சதவீதம் மாணவிகளும், 88.16% சதவீதம் மாணவர்களும் அடங்குவர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 97.67% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும், 97.53% தேர்ச்சி சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 96.22% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.99% பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 95.58% பேரும் தேர்ச்சி அடைந்து அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.