இன்றுடன் 10ம் வகுப்பு தேர்வு நிறைவு.! மே-17 முடிவுகள் வெளியீடு..

Default Image

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால் நாளை முதல் கோடை விடுமுறை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

chennaischools

இதில், 37,798 தனித்தேர்வர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர், மற்றும் 2,640 சிறை கைதிகள், 13,151 மாற்றுத் திறனாளிகள் ஆகியோ எழுதுகின்றனர். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

chennaischools

இதுவரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.25 முதல் மே 3ம் தேதி நடைபெறகிறது. மே-17 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Hockey Asia Cup
Trump - Zelensky
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush