+2 வைத் தொடர்ந்து…ரத்தாகியது 10 வகுப்பு பொதுத் தேர்வு Blue Print!!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறையானது ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ப்ளு பிரிண்ட் முறை என்பது என்னவென்றால் பாடப் புத்தகத்தில் 10 பாடம் இருக்கிறதெனில் அதில் குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் மட்டும் போதும் அதிக மதிப்பெண்ணைப் எடுக்கலாம் என்பதை வழிகாட்டும் ஒரு முறையாகும்.இந்த முறையால் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு கற்று அறிவது மாணவர்களிடத்தில் பின்னோக்கி சென்றுவிட்டது. 100 சதவீத தேர்ச்சி என்றுக் கூறி கல்வியை ஏலம் போட்டு விற்கும் பள்ளிகளுக்கு இந்த ப்ளு பிரிண்ட் முறை ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்துள்ளது.
இத்தைய பள்ளிகளில் படித்த மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றாலும் மேற்படிப்புகளில் அடிப்படை பாடத்தைக் கூட படிக்க முடியாமல் திணறுகின்றனர் என்பது கண்கூடு.மேலும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்தில் சிக்கலை ஏற்படுத்தியது.வெறும் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படும் பள்ளிகளில் தன் கற்றல் அடைவை அறியமுடியாமல் அதனை மேம்படுத்த தெரியமால படிக்கும் மாணவர்களாகவே இருந்து வருகின்றனர் இதனைத் தடுக்க அரசு தரப்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அரசின் நடவடிக்கை சில விமர்சனத்து ஆளானபோதிலும் சில ஆக்கப்பூர்வமாக உள்ளதை மறுப்பதற்கில்லை என்று இவ்வாறு ப்ளு பிரிண்ட் முறை நீக்கம் குறித்து கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே ப்ளு பிரிண்ட் முறை நீக்கம் மாணவர்களுக்கு பயனை அளிக்கும் அதனை அறிய கொஞ்சம் பாடச்சுமையைக் குறைக்கலாம் என்றும் கல்வியாளர்கள் அரசுக்கு அறிவுறுத்துகிறார்கள். ப்ளு பிரிண்ட் முறை ரத்து நடவடிக்கை சற்று தாமதம் என்றாலும் வரவேற்கத்தக்கதே என்று கல்வியாளர்கள் ஆதரவு குரல் எழுப்புகின்றனர்.மேலும் அவர்கள் நீண்ட கால அடிப்படையிலான கற்றலுக்கான நோக்கத்தை நிறைவேற்ற இந்த ப்ளு பிரிண்ட் ரத்து பயனுள்ளதாக அமையும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.