மழை வெள்ளம் – பொது தேர்வு தேதியில் மாற்றமா.? அமைச்சர் விளக்கம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதி மிக்ஜாம் கனமழையால் பாதிக்கப்பட்டு தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது தென்மாவட்ட பகுதி மக்கள் கனமழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுளள்னர்.
கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் வெள்ள நீர் வீதிகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையளவு வெகுவாக குறைந்துள்ள காரணத்தால்வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக நாளை வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடதமிழகம் மற்றும் தென்தமிழகம் பகுதி பள்ளி மாணவர்கள் கனமழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால், 10 மற்றும் 12வது வகுப்பு பயில்வோருக்கு பொதுத்தேர்வில் மற்றம் எதுவும் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு வினா வங்கி புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர, தென்மாவட்ட கனமழையை தொடர்ந்து 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் பாடப்புத்தக பாதிப்புகள் குறித்து கணக்கீடு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.