10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் : மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி…! அரசாணை வெளியீடு..!

Default Image

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத வேண்டிய மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத வேண்டிய மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், ‘மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், நடப்பு 2020-2021ஆம் கல்வி ஆண்டில் நமது மாநிலத்தில் பரவி வரும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுத வேண்டிய அனைவருக்கும் விலக்களித்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஆணையிடப்பட்டுள்ளது என்றும் இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால்   நடத்தப்படும்  பள்ளிகளில்  10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களும் அடங்குவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  தனித்தேர்வர்களுக்காக 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் நடைபெற உள்ளதாகவும். இத்துணைத் தேர்வுகளை மாற்றுத் திறனாளி மாணவர்களும் எழுதவுள்ளனர். தற்போது நிலவி வரும் கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இத்தகைய மாற்றுத் திறனாளி மாணவர்களால் தேர்வு எழுத உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்றும், எனவே நடப்பாண்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைப் போல 2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் நடைபெறும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி தனித் தேர்வர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் விதமாக கேட்டுக்கொண்டுள்ளார். உரிய ஆணைகளை வெளியிடுமாறு அரசை  கேட்டுக்கொண்டுள்ளார்.

2.மேற்கண்ட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவை பள்ளிக் கல்வித் துறையுடன் கவனமுடன் பரிசீலனை செய்த அரசு.2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டத்தின் பிரிவு 17(1) அடிப்படையில், அதனை ஏற்று தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் இத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என ஆணையிடுகிறது.

மேலும் இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கக் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் ஆணையிடப்படுகிறது. அவ்வாறு தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்