10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிகப்பெரிய வரப் பிரசாதம். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.