10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் முதல்., ரிசல்ட் தேதி வரை.., அன்பில் மகேஷ் அறிவிப்பு.!
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10,11,12ஆகிய வகுப்பு பள்ளிமாணவர்களுக்கு 2024-2025 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அட்டவணை விவரங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.
அவர் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, ” 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 14, 2025-ல் முடிவடையும். 12ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 3, 2025இல் தொடங்கி மார்ச் 25, 2025இல் முடிவடையும். இதற்கான முடிவுகள் 09.05.2025இல் வெளியிடப்படும்.
அடுத்து, 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 21, 2025-ல் முடிவடையும். 11ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 5, 2025இல் தொடங்கி மார்ச் 27, 2025இல் முடிவடையும். இதற்கான முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும்.
10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 28, 2025-ல் முடிவடையும். 10ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி ஏப்ரல் 15, 2025இல் முடிவடையும். இதற்கான முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும். ” என அறிவித்துள்ளார்.