தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும், பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரங்கள் :
கல்வி தகுதி : அனைத்துப் பதவிகளுக்கும் இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி ஆகும். மொழிப்பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், 10-ம் வகுப்புக்கு மேல் படித்துள்ள யாரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சம்பள விகிதம் : ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01-07-2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும், 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 01-07-2002 அன்று அல்லது அதற்குமுன் பிறந்தவராகவோ 01-07-1996 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவராகவோ இருக்க வேண்டும். இதையடுத்து, சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு அறிவிக்கப்பட்டள்ளது.
அதாவது, ஜெனரல் கோட்டா வயது வரம்பு 18-24 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26, பட்டியலினத்தவர் 18-29, மூன்றாம் பாலினத்தவர் 18-29, ஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35, முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 26ம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கானச் சான்றிதழ் (equivalent certificate) விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யத் தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது.
விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…